Surprise Me!

குஜராத் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது | Oneindia Tamil

2017-12-18 636 Dailymotion

குஜராத் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையொட்டி இரு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குஜராத்தில் 22 ஆண்டுகாலம் பாஜக ஆட்சியில் தொடர்ந்து இருந்து வருகிறது. குஜராத் மாநிலத்தின் மொத்தம் 182 தொகுதிகளுக்கான தேர்தல் டிசம்பர் 9,14 என இரு கட்டமாக நடைபெற்றது. முதல் கட்டமாக 89, 2-வது கட்டமாக 93 தொகுதிகளில் நடைபெற்றது.

முதல் கட்டமாக டிசம்பர் 9-ந் தேதியன்று குஜராத்தின் சவுராஷ்டிரா, கட்சி மற்றும் தெற்கு குஜராத்தில் வாக்குப் பதிவு நடைபெற்றது. மொத்தம் 66.75% வாக்குகள் பதிவாகி இருந்தன,
2-வது கட்டமாக வடக்கு மற்றும் மத்திய குஜராத்தில் 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 14-ல் வாக்குப் பதிவு நடைபெற்றது. மொத்தம் 68.41% வாக்குகள் பதிவாகின.

குஜராத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 4.35 கோடி. இவர்களில் 2.97 கோடி இரு கட்ட தேர்தல்களிலும் வாக்களித்தனர். நர்மதா மாவட்டத்தில் அதிகபட்சமாக 79.15%; துவாரகாவில் குறைந்தபட்சமாக 59.39% வாக்குகள் பதிவாகி இருந்தன.
முதல் கட்ட தேர்தலில் 57 பெண்கள் உட்பட 977 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 443 சுயேச்சைகளும் களம் கண்டனர்,

The counting of votes for the Gujarat Assembly elections 2017 will be held on Today. The counting will begin at 8 am and results are expected by afternoon.

Buy Now on CodeCanyon